1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்.

peoplenews lka

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்.

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்.

1860 களில் இலங்கையில் 275,000 ஏக்கரளவில் கோப்பி பயிர்ச் செய்கை செய்யப்பட்டுள்ளது. இக்காலத்தில் தான் இலங்கையானது பிரேசில் இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டு கோப்பி உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளுக்குள் இருந்துள்ளது.

17 ம் நூற்றாண்டில் யேமன் நாட்டில் இருந்து இந்தியாவினூடாக இலங்கைக்கு வந்த இஸ்லாமிய யாத்ரீகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே கோப்பி பயிராகும். ஆனாலும் இலங்கையில் இருந்த மக்கள் கோப்பி செடிகள் பூக்கும் முன்னமே கறிகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களுக்கு அக்காலத்தில் கோப்பியின் பயனோ அதன் தேவையோ தெரிந்திருக்கவில்லை.

1740 களில் இலங்கையை ஆண்டுகொண்டிருந்த டச்சு அரசினால் கோப்பி முறையாக பயிரடப்பட்டது. இந்த பயிர்ச்செய்கை தென்னிலங்கையை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. டச்சு அரசாங்கம் இலங்கையில் கோப்பி பயிர்ச்செய்கையை ஒரு மட்டுப்படுத்தல் திட்டத்துக்கு அமையவே நடைமுறைப்படுத்தியிருந்தது. அதனாலேயே கோப்பி பயிர்ச்செய்கைக்கு முறையாக ஒவ்வாத தென்னிலங்கையை பயன்படுத்தி பரீட்ச்சாத்தமான செய்கையை செய்திருந்தது. இதனால் 1769 களில் வெறும் 45,000 Kg அளவிலேயே மொத்த உற்பத்தி இருந்துள்ளது. இதற்கு டச்சு அரசாங்கத்தின் நாட்டில் இருந்த JAVA கோப்பிக்கு ஒரு போட்டியாளராக இலங்கை கோப்பி வந்துவிடக்கூடாது என்பதே காரணம் எனலாம்.

1815 களில் இலங்கையை முழுமையாக கைப்பற்றிய பிரித்தானிய அரசாங்கம் டச்சு அரசு வழியில் தென்னிலங்கையில் கோப்பி பயிர்ச்செய்கையை தொடர்ந்துள்ளது. ஆனால் 1827 வரையில் எந்தவித குறிப்பிடும் படியான முன்னேற்றத்தினை அடையமுடியவில்லை. மேற்கு இந்திய நாட்டின் கோப்பியுடன் இலங்கை கோப்பி உலக சந்தையில் போட்டிக்கு களத்தில் நிற்க முடியவில்லை. அக்காலத்தில் இலங்கையில் கோப்பியினை வர்த்தக ரீதியாக பயிரடக்கூடிய இடமாக தென்னிலங்கை அமையவில்லை மற்றும் இப்பயிர்ச்செய்கையை வெற்றி அடையக்கூடிய வகையில் தோட்டங்களில் தொழிலாற்றக்கூடியவர்கள் போதியளவு இல்லை.

இந்த சந்தர்ப்பத்தில் 1827 களில் கண்டி அரசனால் பிரித்தானிய அரசுக்கு வழங்கப்பட்ட காணிகளைப்பயன்படுத்தி கோப்பி பயிர்ச்செய்கை செய்யும் திட்டம் கண்டியில் பிரித்தானிய அரசினால் தொடங்கப்பட்டது. இதற்கு வலுசேர்க்கும் முகமாக 1830 களில் கோப்பி பயிர்ச்செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து தமிழ் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டார்கள். இவர்களுடைய உழைப்பும் மேற்கிந்திய நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அந்த நாட்டின் கோப்பி பயிர்ச்செய்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இலங்கை கோப்பிக்கு உலக சந்தையில் தேவையை அதிகரித்தது.

இதன் காரணமாக வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்களும் மற்றும் இலங்கை வங்கியும் (Bank of Ceylon) கோப்பி பயிர்ச்செய்கையில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார்கள். இதனால் இலங்கை கோப்பி பயிர்செய்கை அதீத வளர்ச்சி அடைந்தது மாத்திரமல்லாமல் கண்டி பிரதேசத்தின் உட்கட்டமைப்பிலும் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது. 1830 தொடக்கம் 1850 காலப்பகுதியில் கோப்பி பயிர்ச்செய்கையினூடக இலங்கை பொருளாதார ரீதியில் பாரியளவு முன்னேற்றத்தினை அடைந்துள்ளது. இந்த காலத்தில் இலங்கையின் கோப்பி தூள் “ Coffee rush” அஸ்ரேலியாவின் தங்கத்தூள் “Gold rush” உடன் ஒப்பீட்டு பார்க்கப்பட்டது.

1860 தொடக்கம் 1870 வரை இலங்கையானது கோப்பிக்கான உலக ரீதியான தேவையின் மூன்றில் ஒரு பகுதியினை வழங்கி வந்துள்ளது என்பதை வரலாற்றில் இருந்து அறியமுடிகின்றது. இந்த காலப்பகுதியில் பிரித்தானிய சந்தைக்கு 36 million Kg அளவில் கோப்பி இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் கோப்பியானது தரத்திலும் வழங்கல் அளவிலும் இந்தோனேசியா பிரேசில் ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டு உலகில் கோப்பி வழங்கலில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக காணப்பட்டது.

ஆனால் 1870 களில் பிரித்தானிய அரசின் திட்டமிட்ட செய்கையோ அல்லது கவனக்குறைவின் காரணமாக பயிரடப்பட்ட கோப்பி செடிகளுக்கு தேவையான நிழல் வசதி செய்யப்படாத்தால் பங்கசு தொற்று பாரியளவில் ஏற்ப்பட்டது. ஹெமிலியா வெஸ்டாட்ரிக்ஸ் “Hemileia vastatrix” என விஞ்ஞான பெயரால் அழைக்கப்படும் பங்கசினால் முழுமையாக கோப்பி பயிர்ச்செய்கை பாதிப்படைந்தது.

பேரழிவு தரும் எமிலி “Devastating Emily" என மலையக விவசாயிகளால் அழைக்கப்பட்ட இந்த பங்கசு இலங்கையில் கோப்பி பயிர்ச்செய்கையில் இருந்த 1700 பயிர்ச்செய்கையாளர்களில் 1300 அதிகமானவர்களை இதிலிருந்து விலகி நாட்டைவிட்டு வெளியேறச் செய்தது. மீதம் இருந்தோர் தங்களுடைய பயிர்ச்செய்கையை தேயிலை பயிரிடுவதில் மாற்றிக்கொண்டார்கள்.

தமிழர்களால் உலகில் முன்னிலை நாடாக கோப்பி பயிர்ச்செய்கையில் மீண்டும் இந்த நாடு மாற்றம் பெறமுடியும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.

Share on

தேஜா பதிவுகள்

peoplenews lka

அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய 2 பேர் கைது......

விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை.. Read More

peoplenews lka

இந்திய பெருங்கடல் இன்று சீன பெருங்கடலாக மாறுகிறது...

சீனா மிகப் பெரிய தேசம். உலகில் அதிகூடிய சனத்தொகை உடைய நாடு. மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி உடைய நாடு. இன்று மிகத் திடமான பொருளாதாரப் பின்னணியை பெற்றுள்ள நாடு.. Read More

peoplenews lka

எதிர்கால மனித குலத்துக்கு 90 சதவீதம் கடலுணவு!...

உலகில் பறந்து விரிந்துகிடக்கும் சமுத்திரங்களை நம்பி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பெருங்கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் வாசனைப் பொருட்கள் போன்ற ஆடம்பரப் பண்டங்கள் வரை கிடைக்கப் பெறுகின்றன... Read More

peoplenews lka

ஏழைகளுக்கு கிட்டுமா கொவிட்19 தடுப்பு மருந்து?...

கொரோனா தடுப்பூசி பற்றிய செய்தி எமக்காகவா?.. Read More